மீண்டும் ‘வெற்றிமாறன்’ கூட்டணியில் கதாநாயகனாக நடிகர் ‘சூரி’.

photo

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து ஒரு புதிய படத்தில் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்து கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

கூட்டத்தில் ஒருவனாக சினிமாவில் நுழைந்து, இன்று தனக்கான ரசிகர் பட்டாளத்தை சேர்த்து கோடியில் ஒருவனாக மாறி இருக்கும் சூரி, ஒரு காமெடி மெட்டீரியல் என்ற பிம்பத்தை உடைத்து மொத்த கதையையும் தன்னால் சுமக்க முடியும் என நிரூபித்து காட்டிய திரைப்படம் ‘விடுதலை’ . வெற்றிமாறனின் இயக்கத்தில் தரமான கதையாக மக்களை கவர்ந்த இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. முதல் பாடம் வெளியான நிலையில் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

இந்த நிலையில் சூரியின் அடுத்த கதாநாயகன் அவதாரம் தொடங்கியுள்ளது. அதாவது, கூழாங்கல் இயக்குநர் ‘வினோத் ராஜ்’ இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ படத்தில் கமிட்டாகியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தின் கிளிம்ஸ் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து ‘அமீர்’ இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அடுத்தததாக மீண்டும் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்க உள்ளார்.  அதாவது வெற்றிமாறனின் கதையை எதிர்நீச்சல், கொடி, காக்கிசட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை  செந்தில் குமார் இயக்க உள்ளார். மதுரை பின்னணியில் தயாராகும் இந்த படத்தை லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story