‘அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம்’ என்றும் அன்புடன் ‘சூரி’.

photo

காமெடியனாகவே பார்த்து பழகிய ஒரு முகத்தை திடீரென சீரியஸ்ஸாக பார்த்தால், அது ஓர்க்கவுட்டாகுமா? என்ற கேள்விக்கு சாட்சியாக வந்திருப்பவர்தான் சூரி. ப்பா….. என்ன நடிப்புடா! என பலரும் வியக்கும் படியாக தனது திரைவாழ்கையில் மிகச்சிறந்த படம் என கூறும் அளவிற்கு கதையின் நாயகனாக மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

photo

கூட்டத்தில் ஒருவனாய் ஒரு மூலையில் நின்று, இன்று தனக்கான கூட்டத்தை சேர்த்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார் சூரி. இவர் தற்போதுவிடுதலை பாகம் 1’படத்தின் வெற்றியை அடுத்து ரசிகர்களுக்கு நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ அனைவருக்கும் வணக்கம், மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொதுமக்கள், சமூக வலைத்தள நண்பர்கள், அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

photo

பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம்என  அதில் கூறியுள்ளார்.

Share this story