சென்னையில் விரைவில் உணவகம் திறக்கும் நடிகர் சூரி

சென்னையில் விரைவில் உணவகம் திறக்கும் நடிகர் சூரி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை  நடிகராக வலம்  வருபவர் நடிகர் சூரி. சூரியின் காமெடிகள் காலப்போக்கில் சலிப்பு தட்டினாலும் அவரின் உணவகத்திற்கு இன்னும் மவுசு குறையவில்லை. என்னது சூரியின் உணவகமா? என்று ஆச்சரியமாக உள்ளதா? ஆமாங்க நடிகர் சூரி  2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். இதற்கு அப்பகுதியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனால் சூரிக்கு கல்லா கட்டியுள்ளது. 

சென்னையில் விரைவில் உணவகம் திறக்கும் நடிகர் சூரி

இந்நிலையில் உணவகத்தை விரிவுபடுத்த எண்ணிய சூரி சென்னையில் விரைவில் புதிய உணவகம் ஒன்றை திறக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் உணவகத்தை திறக்கவுள்ளனர். 

Share this story