நடிகர் சூரியின் அடுத்த பட டைட்டில் ரிலீஸ்...!

soori

நடிகர் சூரியின் அடுத்த படத்திற்கு ’மண்டாடி'  என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மாமன்'. லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். soori

இப்படம் அடுத்த மாதம் 16-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. 'மாமன்’ படத்திற்கு பிறகு நடிகர் சூரியின் நடிக்க உள்ள படத்திற்கான டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


அதன்படி, நடிகர் சூரி நடிக்க உள்ள படத்திற்கான டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ’மண்டாடி' என அப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
மேலும் படத்தில் உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story