போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்! மற்றொரு நடிகருக்கும் தொடர்பு?

போதைப்பொருள் கடத்த வழக்கில் கழுகு பட நாயகம் கிருஷ்ணாவிடமும் விரைவில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 17ஆம் தேதி மதுபான பார் அடிதடி வழக்கில் அதிமுக நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டார்.பிரசாத்தின் செல்போனில் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்கள் இருந்துள்ளன. பிரசாத் எடுத்து வரும் ‘தீங்கிரை' படத்தில் ஸ்ரீகாந்த் நடித்தபோது, அவருக்கும் போதைப்பொருள் விற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ஸ்ரீகாந்திடம் இன்று காலை விசாரணை நடத்திய போலீசார், ரத்த மாதிரி பரிசோதனைக்குப் பின் அவரை கைது செய்தனர் ஸ்ரீகாந்த் 40 முறை போதைப்பொருள் வாங்கி உள்ளதாகவும், டீலர் பிரதீப்பிற்கு ரூ.4.72 லட்சம் பண பரிவர்த்தனை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த்தின் பெயர் 3ஆவதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிரசாத் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கழுகு பட நாயகம் கிருஷ்ணாவிடமும் விரைவில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.