பான் இந்தியா படத்தில் நடிகர் சுதீப்

பான் இந்தியா படத்தில் நடிகர் சுதீப்

பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கும் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்

தமிழில் `நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான கிச்சா சுதீப் கன்னடத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் சுதீப் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஆர்.சந்துரு இயக்கி வருகிறார். `பாகுபலி', `மதீரா', `ஆர்.ஆர்.ஆர்.' உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதிய பிரபல கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் மேற்பார்வையில் இந்தப் படத்திற்கான திரைக்கதை தயாராகி உள்ளது. அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும என்று கூறப்படுகிறது. 

Share this story