நடிகர் சுனில் பிறந்தநாள்.. ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு !

sunil

நடிகர் சுனில் பிறந்தநாளையொட்டி ‘ஜெயிலர்’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் சுனில். வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அல்லு அர்ஜூனின் மிரட்டலான நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் மங்களம் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனால் தென்னிந்தியாவில் பல மொழிகளில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

sunil

அந்த வகையில் தமிழில் ரஜினிகாந்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் நடிகர் சுனில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி ‘ஜெயிலர்’ படக்குழு சார்பில் மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவருடைய உடை, கம்பீரமான லுக் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story