மும்பையில் குடியேறிய சூர்யா - ஜோதிகா... காரணம் என்ன தெரியுமா ?

suriya

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் மும்பையில் சுமார் 70 கோடியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். 

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் நடிகை சூர்யாவும், நடிகை ஜோதிகாவும். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற‌ மகனும் உள்ளனர்‌. சென்னையில் தனது அப்பா சிவகுமாருடன் கூட்டுக் குடும்பமாக இருக்கும் சூர்யா - ஜோதிகா தம்பதி மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளனர்.‌ மும்பையில் சுமார் 70 கோடி 9 ஆயிரம் சதுர அடியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். 

suriya

மும்பையில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் உள்ள பகுதியில் அந்த வீட்டை வாங்கியுள்ளனர். கடந்த சில மாதத்திற்கு முன்பே இந்த வீட்டை வாங்கி குடிபெயர்ந்துள்ளனர். திடீரென மும்பைக்கு சென்றதற்கு காரணம் என்ன என பல வதந்திகள் பரவி வந்தது. அதாவது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு தனியாக சென்றதாக கூறப்பட்டது. 

ஆனால் குழந்தைகளின் படிப்பிற்காக மட்டுமே மும்பைக்கு குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் பிசியாக சூர்யா நடித்து வருகிறார். நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த ஜோதிகா, மீண்டும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இந்தி வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இதுதவிர இருவரும் 2டி பிரொக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story