கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கியுள்ள நடிகர் சூர்யா

கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கியுள்ள நடிகர் சூர்யா

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும், கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இத்தொடரில் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்க உள்ளன.

கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கியுள்ள நடிகர் சூர்யா

இந்நிலையில், சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளதாக அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே, மும்பை அணி உரிமத்தை அமிதாப் பச்சன், ஐதராபாத் உரிமத்தை ராம்சரண், பெங்களூரு உரிமத்தை ஹிருத்திக் ரோஷன், ஜம்மு காஷ்மீர் அணியை அக்‌ஷய் குமார் வாங்கி உள்ளார். 

Share this story