“அனைவராலும் விரும்பப்படும் படமாக மாறட்டும்” - ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து !

Farhana

‘ஃபர்ஹானா’ அனைவராலும் விரும்பப்படும் படமாக மாறட்டும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஃப்ர்ஹானா'. இந்த படத்தை 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' ஆகிய  வித்தியாசமான படங்கள் மூலமாக மக்களை ஈர்த்த இயக்குனர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர்களுடன் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Farhana

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.  இஸ்லாமியா பெண்கள் படும் இன்னல்கள் குறித்தும், அவர்களது உரிமைகள் குறித்தும் பேசும் இந்த படத்திற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. திருவாரூரில் நேற்று வெளியான இப்படத்திற்கு தமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டது. 

Farhana

இந்நிலையில் ஃபர்ஹானா படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளிட்டுள்ள ட்விட்டர் பதிவில், படத்தை பற்றி நல்ல விஷயங்களை கேள்விப்படுகிறேன். அனைவராலும் விரும்பும் படமாக ஃபர்ஹனா மாறட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

Share this story