‘மார்கோ’ படக் குழுவினரை வாழ்த்திய நடிகர் சூர்யா...!

surya

‘மார்கோ’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான ‘மார்கோ’ திரைப்படம் இந்தியளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தை பார்த்துவிட்டு திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தற்போது சூர்யாவும் படம்பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் நாயகன் உன்னி முகந்தன் மற்றும் ஹனிஃப் அடினி ஆகியோருக்கு பூங்கொத்து அனுப்பி தனது வாழ்த்தை பகிர்ந்திருக்கிறார்.
surya


கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியான இப்படத்தில் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளை மக்கள் கொண்டாடினார்கள். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டது படக்குழு. உலகளவில் ‘மார்கோ’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

ஹனிஃப் அடினி (Haneef Adeni) இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ள இப்படத்தினை ஷெரீப் முகமது தயாரித்துள்ளார். இதற்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளார்கள். சுமார் 30 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

Share this story