ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இது குறித்து நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தசெ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மணிகண்டன், லிஜோ மோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். சான் ரோல்டன் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிக்கும் படியாக அமைந்திருந்தன. சூர்யா அந்தப் படத்தை தனது 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்தார்.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

ஜெய் பீம் திரைப்படம் உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டது. சூர்யா அந்தப் படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்திருந்தார். இவ்வளவு அழுத்தமான கதையில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நடித்துள்ளதை அடுத்து அவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. அதேசமயம் பல எதிர்ப்புகளும் உருவாகின.

இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதை மகிழ்ச்சியுடன் சூர்யா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். நல்ல முயற்சியை வரவேற்று கொண்டாடிய அனைவருக்கும் நன்றி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

Share this story