'தங்கலான் மாபெரும் வெற்றியடையும்'.. நடிகர் சூர்யா பதிவு...!

Thangalan

சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்து பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் படம் தங்கலான். இந்த படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாளை அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.இந்த நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இப்படம் கண்டிப்பாக ஆஸ்கார் பெரும் என்ற உறுதியில் படக்குழுவினர் உள்ளனர்.மேலும், புரோமோசனுக்காக மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் கல்லூரிக்கும், வெளி மாநிலங்களில் உள்ள மெட்ரோ நகரங்களுக்கும் சென்று அங்கு ரசிகர்களைச் சந்தித்து படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.இவ்வாறு விறுவிறுப்பாக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்திற்காக விக்ரம் தன் முழு உழைப்பையும் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், தங்கலான் படத்தை பாராட்டி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த படத்தின் வெற்றி மிக பெரிதாக அமையும் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் உள்ள படத்தின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Share this story