நிவாரண பணிகளில் ஈடுபடும் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த நடிகர் சூர்யா- வெளியான ஆடியோ!
நிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை மீட்டு பணிகள் துரிதமாக நடந்து வந்தாலும் இன்றளவும் சில இடங்களில் மழை நீர் வடிந்தபாடில்லை. இந்த நிலையில் நிவாரண பனிகளில் ஈடுபடும் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா. இது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது.
அரசு, தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள், பிரபலங்கள் என அனைவரும் மக்களுக்காக களப்பணியாற்றிவரும் நிலையில், முன்னணி நடிகர்கள் தங்களது ரசிகர்கள் மூலமாக மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்க்ள் இரவு பகல் பாராது பாணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது அக்கறை கொண்டு நடிகர் சூர்யா அறிவுறை ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது “ தண்ணீலே பசங்க இருக்காங்க, அவங்க நைட் தூங்க போகும் போது கால்ல தேங்காய் எண்ணெய், மஞ்சள் பொடி கடந்து போட சொல்லுங்க. கால சுத்தபடுத்த சொல்லுங்க” என அன்பாக அறிவுரை கொடுத்துள்ளார். இது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது.
#Suriya's lovely voice note for his fans👌
— AmuthaBharathi (@CinemaWithAB) December 9, 2023
Not only cares about the people who are affected by Flood but also about his fans🫂❣️pic.twitter.com/goGS3WWOzR