பாலிவுட்டுக்கு படையெடுக்கும் கோலிவுட் பிரபலங்கள்- அந்த லிஸ்டில் இணைந்த ‘சூர்யா’.

photo

சூர்யா தற்போது பாலிவுட் இயக்குநர் ஒருவருடன் கைகோர்த்து புராண கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

சூர்யா தற்போதுகங்குவாபடத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் தயாராகும் இந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் இணைந்துவாடிவாசல்படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தாமதமாகும் என்பதால் இயக்குநர் சுதா கொங்கரா உடன் கைகோர்த்துள்ளார். ‘சூர்யாவின் 43’வது படமாக அந்த படம் தயாராக உள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் பாலிவுட் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதன்படி பாலிவுட்டில் ரன் தே பஸந்தி, டெல்லி 6, பாக் மிக்லா பாக், டூஃபான் உள்ளிட்ட படங்களை  இயக்கிய இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் மஹாபாரதத்தை பின்னணியாக கொண்ட படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு ‘கர்ணா’ என பெயரிட்டுள்ளார்களாம். பான் இந்திய படமாக தயாராகவுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story