படப்பிடிப்பின் போது விபத்து : நடிகர் சூர்யா காயம்..!

Suriya 44

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா44 என்று தலைப்பு வைத்துள்ளனர்.இப்படத்தின் சூர்யா மற்றும் பூஜா ஹெட்டே இடையிலான ரொமான்டிக் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப் பட்டதாக கூறப்பட்டது.இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை எடுக்கும் போது சூர்யாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டதாம். இதனால் ஷூட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் சூர்யாவுக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்து அவரை ஒய்வு எடுக்கும்படி, மருத்துவர் அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது.  இதனால், அவர் சென்னை திரும்பியுள்ளார். 


 

Share this story