“அண்ணன் விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கிறேன்…”- வைரலாகும் நடிகர் சூர்யாவின் பதிவு.
கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் உடல்நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாக நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.
உடல்நல குறைவுகாரணமாக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. குறிப்பாக சில வதந்திகளும் வெளியாகிறது. வதந்திகளை பரப்ப வேண்டாம், நம்ப வேண்டாம் என திருமதி பிரேமலதா விஜயகாந்த் வீடியோ மற்றும் கேப்டனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் கேப்டன் குறித்து பதிவிட்டுல்ளார். அதாவது “ அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிராத்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்! கோடான கோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்!” என பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு வைரலாகி வருகிறது.