'லவ் டுடே' சக்சஸ்... உதயநிதியை சந்தித்து வாழ்த்துபெற்ற படக்குழுவினர் !

love today

'கோமாளி' பட இயக்குனர் நடித்த 'லவ் டுடே' படத்தின் வெற்றியை அடுத்து உதயநிதியை சந்தித்து வாழ்த்துபெற்றனர். 

 'கோமாளி’ படத்தின் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். 90ஸ் கிட்ஸ்களின் கதைக்களம் கொண்ட இப்படத்தின் வெற்றிக்கு பிறகு 'லவ் டுடே' படத்தை இயக்கியுள்ளார். அதோடு இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

love today

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2k கிட்ஸ்களின் சமகால வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த 4-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

love today

வெறும் 4 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது 20 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் உதயநிதியை சந்தித்து படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், நடிகை இவானா, ரெட் ஜெயண்ட் நிர்வாகி செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

Share this story