தொடர்ந்து உதவிகரம் நீட்டும் பிரபலங்கள்- நிவாரண நிதிக்காக ரூ.6 லட்சம் கொடுத்த திரைக்கலைஞர் ‘வடிவேலு’.

photo

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. தற்போது தான் அதிலிருந்து மக்கள் மீண்டு வருகின்றர். இந்த நிலையில் அரசும் தொடர் நிவாரணங்களை வழங்கி வருகிறது.


அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் பொது நிவாரன நிதிக்காக பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நகைச்சுவை நடிகர் வடிவேலு ரூ.6 லடசத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். இது குறித்து அமைச்சர் பதிவிட்டதாவது” மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this story