நடிகர் வடிவேலு - சிங்கமுத்து வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு

நடிகர் வடிவேலு - சிங்கமுத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று சிங்கமுத்து தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், சாட்சி விசாரணைக்காக வழக்கு விசாரணைக்காக வடிவேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடந்து அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டு கொள்ளுமாறு இரு தரப்பினருக்கும் மாஸ்டர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
அப்போது நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடந்து அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டு கொள்ளுமாறு இரு தரப்பினருக்கும் மாஸ்டர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்துவது தொடர்பாக உயர்நீதிமனறம் தான் முடிவெடுக்கும் என்று மாஸ்டர் நீதிமன்றம் தெரிவித்தது.