‘விலங்கு சீசன் 2’ உருவாகிறதா ?... நடிகர் விமல் கொடுத்த சூப்பர் அப்டேட் !

vimal

‘விலங்கு சீசன் 2’ பணிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக நடிகர் விமல் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் விமர். ‘களவாணி’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், தற்போது மா பெ சி, தெய்வமச்சான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெப் தொடர் ‘விலங்கு’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த வெப் தொடர் நல்ல விமர்சனங்களை பெற்றது. 

vimal

இதனால் விமலின் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு விலங்கு அடுத்த சீசன் உருவாகுமா என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில், தனது குடும்பத்துடன் நடிகர் விமல் இன்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அங்குள்ள யானைக்கு கரும்பு உள்ளிட்ட உணவுகளை கொடுத்து மகிழ்ந்தார். 

vimal

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது மா.பெ.சி, தெய்வமச்சான் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். ‘விலங்கு சீசன் 2’ ஆரம்பிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விலங்கு வெப் தொடருக்கு பிறகு நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். என்னை பற்றி வெளியாகும் வதந்திகளை முருகன் பார்த்துக் கொள்வார் என்று கூறினார்.  

Share this story