சைக்கோ க்ரைம் த்ரில்லர் படத்தில் விதார்த்... டைட்டில் லுக் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி !

viper

விதார்த் நடிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 

சைக்கோ க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராசன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிஸ் பெமினா பட்டம் பெற்ற ரோஷ்னி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் பாலாவின் 'வணங்கான்' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.‌ இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். 

 viper

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுத்தாளர் சீனிவாசன் சுந்தர் எழுதியுள்ளார்.  கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் எம் ராகேஷ் பாபு இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

viper

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் டீசரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்திற்கு 'வைப்பர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  ‌‌‌‌‌‌‌‌‌‌ கண்ணாடி விரியன் பாம்பின் தன்மையும், பண்பையும் கொண்டவர் இந்த படத்தின் கதாநாயகன் என்பதால் இந்த  தலைப்பு படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். 


 

Share this story