ஹைப்பர்லிங்க் க்ரைம் த்ரில்லர் படத்தில் விதார்த்... பூஜையுடன் தொடங்கிய புதிய படம் !

Vidharth

மர்டர் மிஸ்டரி கலந்த சைபர் லிங்க் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் விதார்த் நடிக்கவுள்ளார். 

தமிழ் சினிமாவில் போராடி ஜெயித்த ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விதார்த். குறிப்பிட்ட இடைவேளையில் திரைப்படங்களை நடித்து வந்த அவரது திரைப்படங்கள் சமீபகாலமாக மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைக்களம்தான்.அந்த வகையில் லாந்தர், சமரன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

Vidharth

இதையடுத்து புதிய படம் ஒன்றிலும் விதார்த் நடிக்கவுள்ளார். மர்டர் மிஸ்டரி கலந்த சைபர் லிங்க் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை சகோ கணேசன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் விதார்த்துடன் இணைந்து கலையரசன், சந்தோஷ் பிரதாப், தேஜூ அஸ்வினி, ஜான் விஜய், அதுல்யா சந்திரா, ஸ்வேதா தொரத்தி, ராதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்தை ட்ரெண்டிங் எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஒயிட் ஹார்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. அஜித் அசோக் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை ஹைபர்லிங்க்காக இணைந்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது. இதையடுத்து சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

 

Share this story