விஜய் ஆண்டனி எப்படி இருக்கிறார் ?.. பிரபல இயக்குனர் கொடுத்த அப்டேட் !

Vijay Antony

நடிகர் விஜய் ஆண்டனி உடல்நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவுபெற்ற நிலையில் பாடல் காட்சிகளை பதிவு செய்வதற்காக மலேசியா நாட்டிற்கு படக்குழுவினர் சென்றிருந்தனர். அங்குள்ள லங்கா தீவில் அழகான பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட்டு வந்ததது. அந்த பாடல் காட்சியின்படி கதாநாயகி காவ்யா தாப்பருடன் விஜய் ஆண்டனி ஜெட் ஸ்கையை ஓட்டவேண்டும்.

Vijay Antony

அதன்படியே காட்சியை படமாக்கும் போது ஜெட் ஸ்கை மீது மற்றொரு ஜெட் ஸ்கை மோதியது. இந்த விபத்தில் விஜய் ஆண்டனியின் முகம், உதடு, பற்களில் பலத்த காயம் ஏற்பட்டது. நடிகை காவ்யா தாப்பருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து உடனடியாக கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அபாய கட்டத்திலிருந்து மீண்ட விஜய் ஆண்டனி, தற்போது நலமுடன் உள்ளார். 

Vijay Antony

ஆனால் முகத்தில் அதிக காயம் இருப்பதால் அவருக்கு பிளாஸ்டிக் சிகிச்சை செய்யவேண்டும் என்றும், ஜெர்மனிக்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்லவிருப்பதாக செய்திகள் பரவின. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் உடல் குறித்து அறிக்கை ஒன்றை இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ளார். அதில் 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் காயம் அடைந்த நடிகர் விஜய் ஆண்டனி இரண்டு நாட்களுக்கு முன்னரே சென்னை வந்துவிட்டார். இரண்டு வாரங்கள் அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதனால் ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். விரைவில் உங்களிடம் வீடியோ கால் மூலமாக அவர் பேசுவார். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Share this story