பயிற்சி இல்லாமல் பாடுவார் நடிகர் விஜய் - தேவா
தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவரது திரைப்படங்களுக்கு குட்டி சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது நடனம், ஸ்டைல் மற்றும் குரலுக்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். விஜய்யின் நடனம் ரசிக்கப்படுவதை போலவே, அவர் பாடும் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் விஜய்யை பாடவைக்க அனைத்து இயக்குநர்களும் ஆசைப்படுவது உண்டு.
ஆரம்பத்தில் விஜய்யை முதன் முதலாக பாடகராக அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் தேவா. 1994-ம் ஆண்டு வெளியான ரசிகன் படத்தில் இடம்பெற்ற பம்பாய் சிட்டி என்ற பாடலை தான் விஜய் முதல் முதலாக பாடியிருப்பார். இது குறித்து பேசிய தேவா, நடிகர் விஜய் சொல்லி கொடுத்தவுடன் பாடத் தொடங்கி விடுவார். ஆனால், எந்த பயிற்சியும் இல்லாமல் அழகாக பாடத் தெரிந்தவர் நடிகர் விஜய் என கூறி உள்ளார்