நடிகர் விஜய் ஒரு 'ஸ்வீட்ஹார்ட்' : வில்லன் நடிகர் பாபி தியோல் புகழாரம்...!

'ஜன நாயகன்' படத்தில் நடித்து வரும் வில்லன் நடிகர் பாபி தியோல் விஜய்யை பாராட்டி பேசியுள்ளார்.
பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் 'கங்குவா' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் 'ஜன நாயகன்' படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து பாபி தியோல் பகிர்ந்துள்ளார். அதில், விஜய்யுடன் பணியாற்றி வருவதில் மகிழ்ச்சி என்றும், "விஜய் ஸ்வீட்ஹார்ட்டாக இருக்கிறார். மிகவும் எளிமையான, தன்னடக்கமான மனிதர் என்றும் தெரிவித்துள்ளார்.