களத்தில் தளபதி: நெல்லையில் நிவாரண பொருட்களை வழங்கும் பணியில் நடிகர் ‘விஜய்’!

photo

நடிகர் விஜய் கடும் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை சுமார் 1500 குடும்பங்களுக்கு வழங்குகிறார். 

photo

தளபதி விஜய் படங்களில் நடிப்பதை தாண்டி, தனது மக்கள் இயக்கத்தில் மூலமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறார். அந்த வகையில் இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு மழையால் கடுமையாக பதிக்கப்பட்ட நெல்லை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாணம் வழங்கி வருகிறார்.


மக்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார். தொடர்ந்து விஜய்யின் இந்த செயலுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் விஜய்யுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். உடன் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story