பண உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள்.. ரசிகர்களை அழைத்து பாராட்டிய விஜய் !

vijay

விலையில்லா விருந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் ரசிகர்களை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டியுள்ளார். 

சினிமாவில் பிரபல நடிகராக விஜய் இருந்தாலும், தனது ரசிகர்கள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவ்வெவ்போது அழைத்து சில அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதன்படியே ரசிகர் மன்ற நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். 

vijay

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மூலம் தமிழகம் முழுவதும் விலையில்லா விருந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தால் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் 300 பேரை சென்னைக்கு வரவழைத்து நடிகர் விஜய் பாராட்டியுள்ளார். 

அப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேசிய விஜய், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும், விலையில்லா விருந்து திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவை எந்த காரணத்தை முன்னிட்டு நிறுத்தக்கூடாது என்றார். இதற்காக ஏதேனும் பணம் தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள், நான் உதவி செய்கிறேன். எப்படியேனும் இந்த திட்டம் மக்களிடம் சரியாக சென்று சேரவேண்டும் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.  

 

 

Share this story