நாளை நிர்வாகிகளை ரகசியமாக சந்திக்கும் விஜய்.. முக்கிய விஷயங்கள் குறித்து பேச திட்டம் !
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக அழைத்து அவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை கொடுத்தார். இந்த விழாவிற்காக சுமார் 12 மேணித்திற்கு மேலாக நின்றுக் கொண்டு மாணவர்களை சந்தித்தார்.
இதுதவிர அடிக்கடி தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் விஜய் அவ்வெவ்போது சில அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதேநேரம் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் நின்று வெற்றிப் பெற்றனர். அவர்களை அழைத்து நடிகர் விஜய், பாராட்டினார்.
இவை அனைத்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை திடீரென விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் பனையூரில் உள்ள இல்லத்தில் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து விஜய் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.