‘ரஞ்சிதமே’ பாடல் ஸ்டைலில் கையசைத்த விஜய்.. உற்சாகமான ரசிகர்கள் !

vijay

‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் ஸ்டைலில் ரசிகர்களுக்கு விஜய் கையசைத்த விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

கடந்த 5 ஆண்டுகளாக நடிகர் விஜய் ரசிகர்களை சந்திக்காமல் இருந்தார். இதையடுத்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் தனித்தனியே சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளை இன்று பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். 

vijay

இதற்காக வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேட் அணிந்து செம்ம கெத்தாக காரில் வந்தார். நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்த விஜய், ‘வாரிசு’ படத்தின் ரஞ்சிதமே பாடல் ஸ்டைலில் கையசைத்தது ரசிகர்களை உற்சாகமடைந்தது. இதையடுத்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். 

vijay

அப்போது ரசிகர்கள் மத்திய பேசிய அவர், கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் முறையை தவிர்க்க  என்றும், நலத்திட்ட உதவிகளில் கவனம் செலுத்தவேண்டும் என்றும், தங்களின் வருமானத்தில் குறைந்த அளவே நலத்திட்ட உதவிகளை செய்தாலே போதும் என்றும், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குபடியும் விஜய் கேட்டுக்கொண்டார். இதையடுத்து தனது கையால் ரசிகர்களுக்கு பிரியாணியும் வழங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ரசிகர்களை சந்தித்தது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

Share this story