இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் விஜய்யின் மகன் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கோடிகணக்கான ரசிகர்களை பெற்றும் இவர் நடிப்பதை கடந்து தனது மக்கள் இயக்கம் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் விஜய்யின் மகனான ஜோசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஏற்கனவே குறும்படத்தை இயக்கிய ஜோசன் சஞ்சய், பிரபல நிறுவனமான லைக்கா தயாரிப்பில் படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்திற்காக ஒப்பந்தம் கையெழுத்தான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜோசன் நடிகர் விஜய்யை போல நடிப்பில் கவனம் செலுத்தாமல், அவரது தாத்தா போல இயக்கத்தில் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. விரைவில் படத்தின் நடிகர், நடிகை குறித்த தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்ற விவரம் வெளியாகும்.