‘மகாராஜா’ -ஆக மாறிய விஜய் சேதுபதி.. 50வது படத்தின் தலைப்பு அறிவிப்பு !

Maharaja

 விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

பல மொழிகளில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

Maharaja

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்து வருகிறார். இவர்களுடன் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், நட்டி (எ) நட்ராஜ், முனீஷ்காந்த், அருள்தாஸ், ‘பாய்ஸ்’ மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.  

Maharaja

சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் புகைப்படத்தை அவுட் லைனுடன் இருக்கும் அந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு ‘What Goes Around Comes Around’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. 

Share this story