ரசிகர் மன்ற நிர்வாகியின் சுயமரியாதை திருமணம்... மனைவியுடன் சென்று வாழ்த்திய விஜய் சேதுபதி !
தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்தை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று நடத்தி வைத்துள்ளார்.
தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. மற்ற நடிகர்கள் போல் இவருக்கும் ரசிகர் மன்றம் உள்ளது. விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தில் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் ஜெ குமரன். இவர் விஜய் சேதுபதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகியா இருக்கும் ஜெ குமரனுக்கு சாதி மதம் கடந்து சுயமரியாதை திருமணத்தை நடிகர் விஜய் சேதுபதி நடத்தியுள்ளார். இந்த திருமணத்திற்கு தனது மனைவியுடன் சென்றிருந்த நடிகர் விஜய் சேதுபதி மணமக்களை வாழ்த்தினார்.
உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம் என்பதை வலியுறுத்தி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் எந்த வித மத, சாதி சடங்குகள் நடைபெறவில்லை. அன்பால் மட்டுமே இணைந்துள்ள இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.