இன்ஸ்டா கணக்கு தொடங்கிய விஜய்... குவியும் ஃபாலோவர்கள் !

vijay

நடிகர் விஜய் முதல்முறையாக இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். 

பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் பாலமாக இருப்பது சமூக வலைத்தளங்கள். இந்த சமூக வலைதளங்கள் மூலம் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புதிய படத்தின் அப்டேட்டுகள் உள்ளிட்டவை சமூக வலைத்தளங்கள் மூலமே ரசிகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. 

vijay

இந்நிலையில் முன்னணி நடிகரான விஜய், முதல்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். ஏற்கனவே ட்விட்டரில் மட்டுமே கணக்கு வைத்திருந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கியுள்ளார். அந்த வகையில் முதல் பதிவாக தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

vijay

அதில் கேப்ஷனாக 'ஹாய் நண்பா, நண்பிஸ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கு அரம்பித்த சில மணி நேரங்களிலேயே 4 லட்சம் ஃபாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையே நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ‌

Share this story