விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க.... சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய் !

vijay

தன்னை பார்க்க வருமாறு மழலை மொழியில் பேசிய சுட்டி ரசிகையிடம் வீடியோ காலில் விஜய் பேசியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.  ‌‌‌‌‌‌‌‌‌இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் சமீபத்தில் நிறைவுபெற்றது.  இதையடுத்து நடிகர் விஜய் சென்னை திரும்பி உள்ளார். 

vijay

இந்நிலையில் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த அபிதா பேகம் என்ற சிறுமி, விஜய்யுடன் பேச வேண்டும் என்று க்யூட்டாக சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் விஜய் அங்கிள் என்னை பார்க்க என்று தனது மழலை மொழியில் பேசினார். விஜய் என்றால் யாரு என்று கேட்டதற்கு, ரஞ்சிதமே பாடலை பாடி அசத்தியிருந்தார். 

vijay

க்யூட் சிறுமியின் இந்த மழலை பேச்சின் வீடியோவை சமீபத்தில் நடிகர் விஜய்யும் பார்த்துள்ளார். இதையடுத்து உடனடியாக சிறுமியிடம் வீடியோ கால் மூலமாக நடிகர் விஜய் பேசினார். அப்போது நீங்க க்யூட்டா இருக்கீங்க என விஜய் அந்த குழந்தை பார்த்து கூற,  விஜய்யை பார்த்து சந்தோஷமான அந்த சிறுமி, நீங்களும் க்யூட்டா இருக்கீங்க என கூறுகிறார். தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story