ஃபேன் பாயாக மாறிய தளபதி விஜய்... வைரலாகும் புகைப்படம் !

vijay

அமெரிக்காவின் திரையரங்கு ஒன்றில் ஃபேன் பாயாக மாறி நடிகர் விஜய் ஹாலிவுட் படம் பார்த்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. 

நடிகர் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமாக தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கவுள்ளார்.‌

 vijay

அதனால் விஜய் தோற்றத்தை எந்த வயதிற்கும் மாற்றும் வகையில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தவிருக்கிறது. இதற்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளனர். அங்கு கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் விஜய்யின் தோற்றத்தை வித்தியாசப்படுத்த 3டி விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் அவர் உடலை ஸ்கேன் செய்கின்றனர். இதன் மூலம் விஜய்யின் தோற்றத்தை நினைத்தபடி உருவாக்க முடியும்.‌

vijay

 இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் விஜய், அங்குள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஈக்வலைஸர் 3' படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்த்துள்ளார்.‌ அப்போது ஒரு காட்சியின்போது ஃபேன் பாய் போன்று எழுந்து நின்று தன் கைகளை விரித்து கொண்டாடியுள்ளார். இதை புகைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

Share this story