ஓய்வுக்காக வெளிநாடு சென்ற விஜய்.. வைரலாகும் வீடியோ !

vijay

நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடு சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக விஜய், தற்போது ‘லியோ‘ படத்தில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். 

ஓய்வுக்காக வெளிநாடு சென்ற விஜய்.. வைரலாகும் வீடியோ !

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். பொதுவாக ஒரு படத்தை முடித்தால் ஓய்விற்காக வெளிநாடு செல்வது விஜய்யின் வழக்கம். அந்த வகையில் ‘லியோ’ படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த விஜய் தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் விமானத்தில் இருக்கும் காட்சி ஒன்று வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளது. 


 '

Share this story