இணையத்தை கலக்கும் நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' பட போஸ்டர்கள்..!

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘ஜன நாயகன்’ படத்தின் இரண்டு போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிக்கும் 69-வது படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இதில் இந்தி நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலர் நடிக்கின்றனர். இதை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.இது பாலகிருஷ்ணா நடித்து தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதால் இதுதான் அவருக்குக் கடைசி படம் என்கிறார்கள். அதனால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் பெயரை படக்குழு அறிவித்தது. அதன்படி இதற்கு 'ஜன நாயகன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.‘லியோ’ மற்றும் ‘கோட்’ படப்பிடிப்புகளுக்கு இடையே ரசிகர்களுக்கு மத்தியில் வண்டியின் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி மிகவும் பிரபலம். அந்தப் புகைப்படப் பாணியில் ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளது படக்குழு.அதைத்தொடர்ந்து, செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ‘நான் ஆணையிட்டால்’ என்ற டேக் லைன் உடன் தன் கையில் உள்ள சாட்டையை விஜய் சுழற்றுவது போல இந்த செகண்ட் லுக் போஸ்டர் உள்ளது.
இது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் நடிகர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆணையிட்டால்’ பாடலை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படம் அரசியல் கதைக்களத்தை பின்னணியாக கொண்டது என்பது இந்த போஸடரிலும் உறுதி ஆகிறது. இந்தப் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.