கேரளா நிலச்சரிவு: நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி..!
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் விக்ரம், நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சத்தை வழங்கியுள்ளார். இதுகுறித்து நடிகர் விக்ரமின் மேலாளர் யுவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 150ன் பேர் இறந்தனர், 197 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணவில்லை என்ற சோகமான செய்தியால் வேதனையடைந்தேன். நடிகர் விக்ரம் இன்று கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (sic) ரூ.20 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Pained by the sad news of the devastation caused by the recent landslide in Kerala's #Wayanad district that left over 150 people dead, 197 injured and several others missing, Actor @chiyaan today donated a sum of Rs 20 lakhs to the Kerala Chief Minister's Distress Relief Fund.… pic.twitter.com/mxb7O7YSSN
— Yuvraaj (@proyuvraaj) July 31, 2024