நடிகர் விக்ரமின் அடுத்த இயக்குனர் யார் தெரியுமா ?.. வெளியானது சூப்பர் தகவல் !

vikram

 நடிகர் விக்ரமின் அடுத்த பட இயக்குனரின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

சமீபகாலமாக விக்ரம் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் போதிய வெற்றியை பெறவில்லை. அதனால் அடுத்து ஒரு வெற்றியை கொடுத்தாக வேண்டும் என துடிப்புடன் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் க்ரமின் அசத்தலான நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் நடிகைகள் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் நடித்து வருகிறார்.

vikram

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ப்ரீயட் படமாக உருவாகும் இப்படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் வெளியாகவுள்ளது. 

இந்த படத்தை அடுத்து விக்ரமின் படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர், கர்ணன், மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story