அடுத்த படத்திற்காக தயாராகும் விக்ரம்.. இயக்குனர் யார் தெரியுமா ?

vikram

 நடிகர் விக்ரம் தனது 62வது படத்திற்காக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்த கதாபாத்திரமானாலும் தேடி தேடி நடித்து வருபவர் நடிகர் விக்ரம். அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்து வந்தார். கேஜிஎப் மக்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ப்ரீயட் படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

vikram

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை விக்ரம் நிறைவு செய்தார். இதையடுத்து யாருடைய இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. அது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மகேஷ் சுப்ரமணியம் விக்ரமின் 62வது படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளை லோகேஷ் கனகராஜ் தான் செய்து வருகிறார். 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன், தங்கலான் ஆகிய படங்களுக்காக நீண்ட தாடியுடன் இருந்த விக்ரம், தற்போது கிரீன் ஷேவ் செய்துக் கொண்டு புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். அவரது இந்த மாற்றம் புதிய படத்திற்கான கெட்டப் என்று கூறப்படுகிறது.  

Share this story