வெறித்தனமான லுக்கில் விக்ரம்... எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ‘தங்கலான்’

vikram

வெறித்தனமான லுக்கில் நடிகர் விக்ரம் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

vikram

வித்தியாசமான நடிப்பிற்கு எப்போதும் சொந்தக்காரர் நடிகர் விக்ரம். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் திரைப்படம் ‘தங்கலான்’. சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

vikram

முழுக்க முழுக்க 3டியில் ப்ரீயட் படமாக உருவாகும் இப்படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. 

vikram

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு கேஜிஎப், சென்னை, கடப்பா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேஜிஎப் தங்க சுரங்க பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெறித்தனமான லுக்கில் புகைப்படங்களை நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

vikram

Share this story