ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விக்ரம்
1736674621068

வீர தீர சூரன்' படத்தின் 'கல்லூரும் காத்து என் மேல' பாடல் நேற்று வெளியானது. 'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான `வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தசூழலில், இப்படத்தின் 'கல்லூரும் காத்து என் மேல' பாடல் நேற்று வெளியானது.
ஹரிசரன் மற்றும் ஸ்வேதா மேனன் பாடிய இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் விகரம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’என்னோட அடுத்த 'ஹார்ட்-டஹர்'க்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

என்னோட அடுத்த ‘heart-tugger’க்கு நன்றி @gvprakash!! ❤️#Kalloorum #VeeraDheeraSooran pic.twitter.com/GsNJwmgo74
— Vikram (@chiyaan) January 12, 2025