என்ன எனக்கு நெஞ்சு வலியா? – இது என்னடா புது புரளியா இருக்கு; விளக்கிய விமல்.

நடிகர் விமல் குடிக்கு அடிமையாகி, எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் வீட்டில் முடங்கிய நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமமையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி அதிகம் பகிரப்பட்டது. இந்த தகவலுக்கு நடிகர் விமல் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லை என செய்தி வந்ததை கேள்விபட்டேன். தற்போது நான் படப்பிடிப்பில் இருக்கிறேன். இயக்குனர் மைக்கேலுடன் கைகோர்த்துள்ளேன். படம் விரைவில் வெளியாகவுள்ளது. மதுபானத்திற்கு நான் அடிமையானதாக செய்திகள் வெளியாகின. அவை முற்றிலும் தவறான செய்திகள். நான் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இதனை யார்? எதற்காக? செய்கிறார்கள் என்பது தெரியாவில்லை. அவரவரின் வேலையை பார்ப்பது நல்லது. வேண்டாத விஷக்கிருமிகள் இவ்வாறு செய்வதாக அறிகிறேன்.
அவர்கள் யார் என எனக்கு தெரியும். நீங்களும் வாழுங்கள், என்னையும் வாழவிடுங்கள். தேவையில்லாமல் சில்லறை வேலைகள், விடியோக்களை பதிவிட்டு யாரையும் காயப்படுத்த வேண்டாம்" என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.