அறிமுக இயக்குனரின் படத்தில் நடிகர் விமல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

vimal
 விமல் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த விமல், தற்போது போதாத காலம் போலிருக்கிறது. ஏனென்றால் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வி சந்தித்து வருகிறார். இதனால் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

vimal

ஏற்கனவே அவர் நடிப்பில் உருவாகியுள்ள எங்க பாட்டன் சொத்து, சண்டக்காரி, கன்னி ராசி, வெற்றிக்கொண்டான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்த படங்களின் வெற்றியை பொறுத்தே, அவரின் எதிர்காலம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று  படவா, மஞ்சள் குடை, லக்கி, ப்ரோக்கர், குலசாமி, துடிகாரங்கள்  உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.  தற்போது 'புரூஸ் லீ' படத்தை இயக்கிய பிரசாத் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடித்து வருகிறார்.  

இந்நிலையில் விமல் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விமலின் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மார்ட்டின் நிர்மல்குமார் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் பாண்டியன் ராஜ், நடிகை தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். உதய் பிரக்ஷன் மற்றும் மெஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.  

Share this story