மதுப்பிரியர்களை அடித்து விரட்டிய நடிகர் விஷால்

மதுப்பிரியர்களை அடித்து விரட்டிய நடிகர் விஷால்

மார்க் ஆண்டனி படத்தைத் தொடர்ந்து தனது 34-வது படத்தில் விஷால் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு ரத்னம் என்று தலைப்பு வைத்துள்ளனர். இயக்குநர் ஹரி, விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதில் பிரியாபவானி சங்கர் அவர் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இயக்குநர் கவுதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் நடிகர் விஷால் அடித்து விரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இப்படத்திற்காக டாஸ்மாக் கடை மாதிரி செட் போடப்பட்டுள்ளது. இது உண்மையான கடை என்று நினைத்து மதுவாங்க வந்தவர்களிடம் இது செட் என கூறி விஷால் விரட்டினார்.

Share this story