விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கிய நடிகர் விஷால்

விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கிய நடிகர் விஷால் 

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரை நட்சத்திரங்களும், நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தற்போது தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நினைவிடத்தில் மட்டுமல்லாது விஜயகாந்தின் இல்லத்திற்கும் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

nullஇந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நடிகர் ஆர்யாவுடன் சேர்ந்து அந்த இடத்தில் வந்திருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்

Share this story