விஷால் பட படப்பிடிப்பில் தொடரும் விபத்துக்கள்.. அச்சத்தில் படக்குழுவினர்
விஷால் படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து விபத்து நடப்பதால் படக்குழுவினர் அச்சமடைந்துள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இவர்களுடன் ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
1970-ஆம் ஆண்டு நடக்கும் கதைக்களத்தை கொண்டு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கும் போது லாரி ஒன்று படப்பிடிப்பி தளத்திற்கு புகுந்தது. பெரிய அசம்பாவிதம் நடக்கவிருந்த நிலையில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பில் இருந்த லைட் கம்பம் ஒன்று லைட்மேனின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பில் தொடர்ந்து விபத்துக்கள் நடப்பது படக்குழுவினரை அச்சமடைய செய்துள்ளது.