“அண்ணே என்ன மன்னிச்சிடுங்கண்ணே….”- தேம்பி அழுத ‘விஷால்’!

photo

நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஷால் வீடியோ ஒன்றை பதிவிட்டு கேப்டனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

photo

இன்று காலை 6.10 மணியளவில் கேப்டனின் உயிர் பிரிந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நுரையீரல் அலற்சி காரணமாக வெண்டிலேட்டர் சிகிச்சை பலன் கொடுக்காமல் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் விஷால் வீடியோ மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளார், அதில் “ அண்ணே மன்னிச்சிடுங்க அண்ணே… இந்த நேரம் நான் உங்க கூட இருந்துருக்கனும் உங்க கால தொட்டு வணங்கியிருக்கனும், எனக்கு இப்படியெல்லாம் ஆகுன்னு தெரியாது, நீங்க எவ்ளோ உதவி பண்ணீருக்கீங்க, கட்சி ஆபீசுக்கு எப்போ வந்தாலும் சாப்பாடு போடுவீங்க நீங்க எப்படி செயல் பட்டீங்களோ அதே மாதிரிதான் நானும் ஆசைப்பட்டேன். உங்கள கடைசியா ஒரு முறை பாக்கலையேன்னு வருத்தமா இருக்கு” என கண்ணீர் மல்க வீடியோவில் பேசியுள்ளார்.  

Share this story