“ரொம்ப கேவலமா இருக்கு……”-அரசுக்கு டோஸ்விட்ட நடிகர் விஷால்.

photo

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டரா பகுதி மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் மக்களுக்கு உதவ அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் களத்தில் இறங்க வேண்டும்; தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமாகவும், கேவலமாகவும் உள்ளதாக நடிகர் விஷால் வீடியோ மூலமாக தனது காட்டத்தை பதிவு செய்துள்ளார்.

photo

இது வரை பெய்யாத வரலாறு காணாத மழையை சென்னை சந்தித்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்க்கையை வாழ கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். மின்சாரம் இல்லாமல் பல பகுதிகள் இருளில் மூழ்கி தத்தளிக்கிறது. இதனை மேற்கோள் காட்டி நடிகர் விஷால் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நான் அண்ணா நகரில் உள்ளேன் இங்கே இந்த கதி என்றால் மற்ற இடங்களில்? 2015ல் இதேப்போல நடக்கும் போது அனைவரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவு பொது மக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடம் கழித்து அதைவிட மோசமான நிலையில் இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழை நீர் சேமிப்பு, மழைநீர் வடிகால் போன்ற திட்டங்களை சென்னை பொருநகர மாநகராட்சி அறிவித்தது அது எங்கே  என தெரியவில்லை?


ஒரு நடிகனாக அல்ல வாக்காலர் என்ர முறையில் இதை நான் கேட்கிறேன். சென்னை தொகுதி எம்.எல்.ஏக்கள் நிலைமமையை சரி செய்து கொடுக்க வேண்டும். பொது மக்கள சேவை செய்வது ஒரு புறம் இருக்கட்டும் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் களத்தில் இறங்கி பணியாற்றினால் மக்களுக்கு தன்னம்பிக்கையாக இருக்கும்.

photo

குழந்தைகள், சீனியர் சிட்டிசங்கள் உள்ள வீடுகளில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது பொது பிரச்சனை தண்ணீர் தேங்கியுள்ளது தர்மசங்கடமான, கேவலமான ஒரு விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக சென்னை பெருநகர மாநகராட்சி, அரசு ஊழியர்கள் இறங்கி பணிகளை விரைந்து செய்யுங்கள், நாங்கள் எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைக்காதீர்கள்.” என வீடியோவில் கூறியுள்ளார்.

Share this story